ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு கிருஷ்ணகிரி, ஆந்திரா, தாளவாடி, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து தினந்தோறும் 8 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வருகின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கள் வரத்து குறைந்து வருவதால் அதன் விலையும் யேகபோகதுக்கு உயர்ந்து உள்ளது.
ஈரோடு சந்தைக்கு நேற்று கிருஷ்ணகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து 1,500 பெட்டிகள் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தன. இதனால், வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
கடந்த வாரம் ₹10 க்கு விற்பனை ஆன ஒரு கிலோ தக்காளி நேற்று ₹25 க்கு விற்பனை ஆனது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
