ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் உயிரிழப்பை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. தேமுதிக வேட்பாளராக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More