Mnadu News

உக்ரைனில் மீண்டும் ரஷிய ஏவுகணை தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு- 25 பேர் காயம்.

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் ஒரு வருடத்தைக் கடந்து நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன் தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகின்றது.இந்நிலையில், கிரிவி ரிஹ் மீது ரஷிய படைகளை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மக்களின் உடைமைகள் பெரிதளவில் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு,;, குடியிருப்பு மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. இதில், அடுக்கு மாடிக் கட்டம் தாக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். கிரிவி ரிஹில் பகுதியில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Share this post with your friends