Mnadu News

உக்ரைனுக்கு ஆதரவு தொடரும்: ஸெலென்ஸ்கியிடன் ரிஷி சுனக் உறுதி

பிரிட்டன் வரலாற்றில் 210 ஆண்டுகளுக்குப் பிறகு மிக இளைய வயதில் வெள்ளை இனத்தைச் சேராத. அந்த நாட்டின் முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக், நேற்று முதல் வெளிநாட்டுத் தலைவருடனான தனது முதல் தொலைப்பேசி அழைப்பில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியிடம் பேசினார்.
அப்போது, ரஷியாவுடனான போரில், உக்ரைனுக்கு எப்போதும் போல் பிரிட்டன் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதியளித்தார்.
அதோடு;, தனது அரசு தொடர்ந்து “ஒற்றுமையின் பக்கம் நிற்கும் என்பதை நம்பலாம்” என்று கூறியதாக சுனக் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அப்போது, உக்ரைனுக்கு வருகை தருமாறு ரிஷி சுனக்கு ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends