Mnadu News

உக்ரைனுக்கு ராணுவ டாங்கி கொடுத்த போலாந்து: கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்திய ரஷியா.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஏற்கனவே 4 ராணுவ டாங்கிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும், மேலும் ஆயுதங்களை விரைவில் வழங்க உள்ளதாகவும் போலாந்து பிரதமர் மெடூசி மொரவிஹி கடந்த சில தினங்களுக்கு முன் கூறினார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் போலாந்துக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கிருந்து ரகசியமாக ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றார். அவரது கீவ் பயணம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலாந்திற்கு வழங்கிவந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷியா அதிரடியாக நிறுத்தியுள்ளது. துர்ஷா பைப் லைன் வழியாக விநியோகிக்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷியா இன்று நிறுத்தியுள்ளதாக போலாந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. போரில் உக்ரைனுக்கு ராணுவ டாங்கி வழங்கியதற்கு பதிலடியாக போலாந்திற்கு கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. ரஷியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் போலாந்தில் கச்சா எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends