Mnadu News

உக்ரைன் அதிபருடன் ஸ்வீடன் சூழலியல் ஆய்வுக் குழு சந்திப்பு: சுற்றுச்சூழல் பாதிப்புகளை சரி செய்வது பற்றி ஆலோசனை.

உக்ரைன் போரால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் குழுவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ளார். உக்ரைன் – ரஷ்யா போரால் சுற்றுச்சூழல் எந்த வகையில் எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை ஸ்வீடன் சூழலியல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.தற்போது,உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்துக்கு சென்றுள்ள இந்த ஆய்வுக் குழுவினர் அங்கு நிலவும் சூழலை ஆய்வு செய்தனா.;பின்னர்,செய்தியாளர்களிடம் பேசியுள்ள கிரெட்டா துன்பெர்க், அணை உடைப்பு சம்பவத்தை உக்ரைன் போர்க் குற்றமாக விசாரிக்கிறது. ஆனால், இதனை சுற்றுச்சூழல் மீதான கிரிமினல் தாக்குதலாகவே விசாரிக்க வேண்டும். இது ஈக்கோசைட் .இது குறித்து நாம் உரக்கப் பேச வேண்டும். ஈக்கோசைட் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.பின்னர், இந்தக் குழுவானது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தது. அப்போது போரினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை சரி செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அணை உடைப்பால் 1 லட்சத்து 25 ஆயிரம் பில்லியன் யூரோ அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வுக் குழு கணித்துள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More