Mnadu News

உக்ரைன் போருக்கு மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா பயணம்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்கிறார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹவா சுன்யிங்,ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அழைப்பை ஏற்று அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா செல்ல உள்ளார். வரும் 20-ஆம் தேதி ரஷ்யா செல்லும் அதிபர், வரும் 23-ஆம் தேதி அங்கிருந்து சீனாவுக்கு திரும்புகிறார்” என்று தெரிவித்தார். இந்தப் பயணத்தின்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர புதினுக்கு ஜி ஜின்பிங் அழுத்தம் கொடுப்பாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஹவா சுன்யிங், ”பேச்சுவார்த்தைதான் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்பதில் சீனா நம்பிக்கை கொண்டிருக்கிறது” என்றார்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More