தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கும் விற்பனை. தங்கம் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து வந்த நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் ஏறியுள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கும் பார் வெள்ளி ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.