Mnadu News

உச்சநீதிமன்றம் நீதிபதிகளாக பிரசாந்த்,கே.வி.விஸ்வதான் பதவியேற்பு.

உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழககுரைஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் உச்சநீதிமன்றம் நீதிபதிகளாக பதவியேற்றனர். இருவருக்கும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தற்போது, உச்சநீதமன்றம் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.

Share this post with your friends