ஜார்கண்டில் உள்ளது தும்கா மாவட்டம் இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்களை துன்புறுத்தி பல்வேறு கொடுமைகளை ஒரு சில நபர்கள் அரங்கேற்றி உள்ளனர். இது குறித்து அந்த வீட்டின் பெண்கள் சரையாஹாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே போலீசார் இது குறித்து தீவிரம் காட்டியுள்ளனர்.

அவர்களை சூனியக்காரிகள் என பட்டம் சூட்டியு இரும்பு தடியை சூடாக்கி, அதனை கொண்டு அவர்கள் உடலின் பல பகுதிகளில் சூடு போட்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அதனுடன் விடாமல், மனித தன்மையற்ற செயலிலும் ஈடுபட்டு உள்ளனர். கொடுமையின் உச்சமாக அந்த நான்கு பேரையும் மனித கழிவுகளை உண்ணும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு சென்று பெண்களை மீட்டு சமூக சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஜோதின் என்பவர் மற்ற கிராம வாசிகளை அழைத்து அவர்களை இதுபோன்று செய்யும்படி தூண்டி விட்டுள்ளார் என விசாரணையில் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த ஆறு பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் அவர்கள் கம்பி எண்ணுவார்கள் என உயரதிகாரி உறுதியாக கூறியுள்ளார்.
