மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க ஒருநாள் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சிசோடியாவை காவல்துறையினர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற நிலையில், அதற்கு முன்னதாகவே உடல்நிலை மோசமடைந்த காரணத்தால் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால், மனைவியை பார்க்காமலே மீண்டும் சிறைக்கு திரும்பினார் மனீஷ் சிசோடியா.இந்நிலையில், சிசோடியாவின் மனைவியை மருத்துவமனை அல்லது வீட்டில், காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை சந்திக்க அவருக்கு மீண்டும் அனுமதி அளித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More