Mnadu News

உதகை நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: பயணிகள் அவதி.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த சூழலில், தற்போது, கோடை சீசன் தொடங்கியுள்ளதோடு, மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிந்துவிட்டதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.இதனால், கமர்சியல் சாலை, ஆட்சியர் அலுவலக சாலை, பேருந்து நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் உதகை – குன்னூர் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்;கின்றன. இதனால், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை காணப்பட்டுள்ளது.எனவே, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுப்பட்டுள்ளார்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More