தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதியின் சினிமா பயணம் முதல் அரசியல் வரை அவரது பயணம் குறித்து இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
கடந்த 1977 நவம்பர் 27- ஆம் ஆண்டு; பிறந்த உதயநிதி சென்னை லயோலா கல்லூரில் பி.காம் பட்டப்படிப்பு முடித்தார்.
அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி, ரெட்ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகவும், அதைத்தொடர்ந்து நடிகராகவும் அறிமுகமானார்.
கடந்த 2009- ஆம் ஆண்டு; வெளியான ஆதவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் உதயநிதி.
கடந்த 2012-ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, மனிதன், இப்படை வெல்லும், நிமிர், சைகோ, நெஞ்சுக்கு நீதி, கழகத் தலைவர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் உதயநிதி நடித்திருக்கிறார்.
15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள உதயநிதி, விண்ணைத்தாண்டி வருவாயா, விக்ரம், கோப்ரா, லவ்டுடே உள்ளிட்ட திரைப்படங்களையும் விநியோகம் செய்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார்.
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழைந்தார்.
திமுக நடத்திய போராட்டங்கள், கிராம சபை கூட்டங்களில் பங்கேற்ற உதயநிதி, கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தல்களில் தமிழகம் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு 69ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2022 நவம்பர் மாதம் 23 ஆம் தேதி திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
2022 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி( இன்று) திமுகவின் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதற்கான கோப்பில்; கையெழுத்திட்டார் .

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More