தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினை இணைத்துக் கொள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவியிடம் வழங்கிய நிலையில், அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அரசுத் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.,உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதன் மூலம் தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரிக்கும். தமிழக அமைச்சரவையில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதிவேந்தன் ஆகியோர் 45 வயதுக்குக் குறைவான இளம் வயது அமைச்சர்களாக உள்ளனர். அவர்களின் வரிசையில் இப்போது உதயநிதி ஸ்டாலினும் இடம்பெறுகிறார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More