உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியதிலிருந்தே பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்தது.இந்நிலையில்,அங்குள் 17 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடங்களில் 16 இடங்களில் பாஜக வெற்றி பெற்று சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சிகளை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சுவார் மற்றும் சான்பே ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் எங்கள் கூட்டணி கட்சியினர் சமாஜ்வாதி கட்சியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அதோடு, மக்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக உ.பி அரசு தொடர்ந்து பாடுபடும் என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More