உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் நகரில் ரமா மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கப்பட்டு உள்ளது. சாதம், சாம்பார், புளி குழம்பு போன்றவை பரிமாறப்பட்டுள்ளன. அதில், புளி குழம்பில் செத்த எலி கிடப்பது தெரியவந்தது கண்டு அதிர்ந்து உள்ளனர்.
எலி கிடப்பதைக் கண்ட ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குழம்பில் காய்கறி அதிகம் இல்லாத நிலையில், செத்த எலி முழுமையாக கிடந்தது வீடியோவைப் பார்த்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. வீடியோவிலும் அது எடுக்கப்பட்ட தேதி காணப்படவில்லை. இந்த வீடியோ வெளியான பின்பும் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன், சீனாவின் உள்ள ஒரு கல்லூரி கேண்டீனில் வாத்து இறைச்சியில் எலித் தலை கிடைந்தது வைரல் ஆனது. அதே போல பிரிட்டனில் உள்ள கேஎஃப்சி உணவகம் ஒன்றில் ஒரு பெண்ணுக்கு துண்டிக்கப்பட்ட கோழித் தலையுடன் உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வீடியோ லிங்க்: