Mnadu News

உத்தர பிரதேசத்தில் மாபியா கும்பல் தலைவரின் வீடு இடித்து தரைமட்டம்: ஆட்சியர் நடவடிக்கை.

உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் வினோத் உபாத்யாய். இவருக்கு எதிராக 4 கொலை வழக்குகள் உள்பட 32 வழக்குகள் உள்ளன. அவரை பிடித்து தருபவர்களுக்கு, தகவலை தருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.எனினும், கடந்த சில நாட்களாக அவரை காணவில்லை. தப்பியோடிய அவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அவர் அரசு நிலத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்ததுடன், அதற்கு அடுத்து அமைந்துள்ள பிளாட்டையும் ஆக்கிரமிக்க முயற்சி செய்து உள்ளார்.இதுதவிர, நிலத்தில் அவர் கோடிக்கணக்கான மதிப்பிலான வீடு ஒன்றை தனக்காக கட்டி கொண்டார். இந்த வீட்டை கோரக்பூர் வளர்ச்சி கழகம் அடையாளம் கண்டறிந்தது. இதனை தொடர்ந்து அதனை இடிக்கும் பணி நடந்து உள்ளது என மாவட்ட எஸ்.பி. கிரிஷன் பிஷ்னோய் கூறியுள்ளார். புல்டோசகர் கொண்ட அந்த வீடு இடித்து தள்ளப்பட்டது. தப்பி சென்ற அவரை தேடும் பணியும் தொடர்ந்து வருகிறது. அவரை கைது செய்வதற்கான பரிசு தொகையும் அதிகரிக்கப்படும் என எஸ்.பி. அறிவித்து உள்ளார்.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More