Mnadu News

உயிரி ஆயுதமாக உருவாக்கப்பட்டதே கோவிட் வைரஸ்: வூஹான் ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்.

சீனாவில் பிறந்த மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான ஜெனிபர் ஜெங், வூஹானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ என்பவரிடம் ஒரு பிரத்யேக நேர்காணல் நடத்தினார். இதில,; கொரோனா வைரஸ் ஒரு ‘உயிரி ஆயுதம்’. வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த மற்றொரு ஆராய்ச்சியாளரும் என்னுடைய மேலதிகாரியுமான ஷான் சாவோ, என்னிடம் நான்கு கொரோனா வைரஸ் மாதிரிகளை வழங்கினார். அதில், அதிக வீரியமான மற்றும் மனிதர்கள், மற்ற உயிரினங்களை எளிதாகவும், அதிக தொற்றும் திறனாகவும் கொண்டது எந்த வைரஸ் என்பதை கண்டறியுமாறு கூறினார்.அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு ஏப்ரலில், ஷான் சாவோ, முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்குர் முஸ்லீம்களின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக ஷின்ஜியாங்கிற்கு அனுப்பப்பட்டார். வைரஸை மனிதர்களுக்கு பரப்பி, அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் கவனிப்பதற்காக அங்கு அனுப்பப்பட்டதாக அவரே உறுதியாக குறிப்பிட்டார்.

Share this post with your friends