கொரோனா வைரஸ் தாக்கம் 2019 ஆம் ஆண்டு துவங்கியது முதல் தற்போது வரை ஒவ்வொருவரும் பல்வேறு நிலைகளில் அவதிப்பட்டு வந்தாலும் பல நல்ல செயல்களை கொரோனா நமக்கு கற்று தந்துள்ளது எனலாம்.
தடுப்பூசி, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது என இவை அனைத்துமே மனிதனின் வாழ்வின் அங்கமாக மாறி விட்டன.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 59 லட்சத்து 09 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 61 கோடியே 53 லட்சத்து 43 ஆயிரத்து 492 பேர்குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 95 ஆயிரத்து 454 பேர் உயிரிழந்துள்ளனர்.