Mnadu News

உலகம் இந்தியாவை உற்றுநோக்குகிறது: பாதுகாப்புத் துறை அமைந்நர் ராஜ்நாத் சிங் பேச்சு.

காஷ்மீரில்,ஜம்மு பல்கலைக் கழகத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,இந்தியா பேசுவதை உலகம் இப்போது உன்னிப்பாகக் கேட்கிறது, இது முன்பு இல்லை. மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், சர்வதேச அரங்கில் இந்தியாவின் கௌரவம் உயர்ந்துள்ளது. முன்னதாக, சர்வதேச அரங்கில் இந்தியா ஏதாவது பேசும் போது, அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. 2014இல் மோடி பதவியேற்ற பிறகு நிலைமை மாறிவிட்டது. பயங்கரவாத பிரச்சினையில் அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் மனப்போக்கை இந்தியா மாற்றியுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட ஐ.நா-பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா- சீனா எல்லைப்பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என நம்பிக்கை உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends