Mnadu News

உலகிலேயே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி: வேல்ட்டு அப்டேட்ஸ் நிறுவனம் பட்டியல் வெளியீடு.

உலகத்திலேயே அதிக உறுப்பினர்கள் மற்றும் உலகத்தில் அதிக பிரபலமானவர்களின் பட்டியலை வேர்ல்டு அப்டேட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், உலகத்திலேயே பாரதிய ஜனதா கட்சி அதிகளவு தொண்டர்களை கொண்ட முதல் கட்சி என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டாவதாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியும், 3 வது இடத்தை அமெரிக்காவின் டெமோகிரெடிக் பார்ட்டியும் 4 வது இடத்தை இந்திய தேசிய காங்கிரசும், 5வது இடத்தை அமெரிக்காவின் குடியரசு கட்சியும் பிடித்துள்ளது. 7 வது இடத்தை அ.தி.மு.க.வும், 9வது இடத்தை ஆம் ஆத்மி கட்சியும், 14வது இடத்தை தெலுங்கு தேசம் கட்சியும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. முதல் 15 இடங்களை பிடிக்கவில்லை. இந்த கட்சி எந்த இடத்தை பிடித்துள்ளது என்ற பட்டியலும் வெளியிடப்படவில்லை.

Share this post with your friends