கொரோனா பாதிப்பு அண்மை காலமாக ஏற்றம் எடுத்து வருகிறது. உலகமெங்கும் கொரோனா தாக்கம் குறித்து மத்திய சுகாதார துறை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
நாடெங்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 61 லட்சத்து 32 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 48 லட்சத்து 73 ஆயிரத்து 971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 கோடியே 46 லட்சத்து 22 ஆயிரத்து 516 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 36 ஆயிரத்து 186 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.