Mnadu News

உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: அக்.,15ல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்.

இந்திய மண்ணில் 13வது உலக கோப்பை 50 ஓவர் கொண்ட கிரிக்கெட் தொடர் வரும் அகடோபர் 5 முதல் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். 45 லீக் போட்டி முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் நவம்பர்,19ல் இறுதிப்போட்டியில் மோதும். இதற்கான தற்காலிக அட்டவணை முடிவு செய்யப்பட்டு, மற்ற அணிகள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் போட்டி அட்டவணை, மும்பையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.இதன்படி, அகடோபர் 5ல் நடக்கும் முதல் போட்டியில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அக்டோபர்,8ல் சென்னையில் எதிர்கொள்கிறது. சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுகிறது. முதலாவது அரையிறுதி நவம்பா 15 ல் மும்பையிலும், இரண்டாவது அரையிறுதி நவம்பர் 16லும் கோல்கட்டாவிலும் நடைபெறுகிறது. நவம்பர் 19ல் நடக்கும் பைனல், ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது.

Share this post with your friends