Mnadu News

உலக டேபிள் டென்னிஸ் போட்டி: அரை இறுதியில் மணிகா-சத்தியன் ஜோடி.

துனிசியா நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சத்தியன் ஜோடி, ஜெர்மனியின் செட்ரிக் மெய்ஸ்னர், யுவான் வான் ஜோடியை எதிர்த்து விளையாடியது.21 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா, சத்தியன் ஜோடி 11க்கு 8, 11 க்கு 3, 11 க்கு8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான ஆட்டத்தில் மணிகா பத்ரா, சத்தியன் ஜோடி கொரியாவின் ஷின் யூபின், லிம் ஜாங்ஹ_ன் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Share this post with your friends