Mnadu News

உலக நாயகன் கமல் – ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் வில்லன் யார் தெரியுமா?

ஹெச் வினோத் இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து படங்களுமே சிறந்த இயக்குனர் என்ற பெயரை பெற்று தந்தது. தற்போது நடிகர் அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்துக்கான இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில் ஹெச் வினோத் உலக நாயகன் கமல் உடன் கூட்டணி அமைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் பரவின அது தற்போது உறுதி ஆகியுள்ளது. இப்படத்தை கமல் தயாரித்து நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கும் ஜிப்ரான் இசையமைக்க வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு முக்கியமான வில்லன் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி ஆகியுள்ளது.

Share this post with your friends