Mnadu News

உலக நாயகன் – ஹெச் வினோத் காம்போவில் உருவாகும் படம் விவசாயம் பற்றிய கதைக்களமா?

ஹெச் வினோத்:

“சதுரங்க வேட்டை” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் ஹெச் வினோத். முதல் பந்தே சிக்சர் என்பது போல, முதல் படத்திலேயே தமது தனித்துவ திரைக்கள யுக்தியால் தமிழ் சினிமா ரசிகர்களை அசர வைத்தவர். தொடர்ச்சியாக, சமூக பொறுப்போடு திரைக்கதையை கட்டமைப்பதில் வல்லவர். “சதுரங்க வேட்டை” படத்துக்கு பின் என்ன மாதிரி படத்தை கொடுக்க போகிறார் இவர் என்கிற கேள்விக்கு சரியான விடை தந்தார் “தீரன் அதிகாரம் ஒன்று” படம் வாயிலாக. எல்லா தரப்பு ரசிகர்களும் கொண்டாடிய படம் இது.

அஜித்தின் அழைப்பு :

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் வரவேற்பை பார்த்த அஜித் ஹெச் வினோத்தை அழைத்து தன்னை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை அளித்தார். ஆம், “பிங்க்” படத்தின் “ரீமேக்” தான் “நேர்கொண்ட பார்வை”. இந்த படம் சோஷியல் மெஸேஜ் உள்ள படமாக அமைந்து நல்ல பெயரை பெற்று தந்தது.

தொடர் கூட்டணி :

“நேர்கொண்ட பார்வை” படத்துக்கு பிறகு மீண்டும் அஜித் தன்னை வைத்து இயக்கும் வாய்ப்பு வழங்கினார். அது தான் “வலிமை”. இந்த படம் கமர்ஷியல் வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும், கதையில் அஜித் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது.

மூன்றாவது முறையாக :

ஹெச் வினோத் திறனை வியந்த அஜித் மீண்டும் தன்னை வைத்து ஒரு படம் இயக்க வாய்ப்பு தந்தார். ஆனால், இந்த முறை 100 சதவீதம் ஹெச் வினோத் கதைக்களம். இந்த வருட பொங்கலுக்கு வெளியான “துணிவு”. விமர்சன மற்றும் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. பட்டி தொட்டி எல்லாம் வினோத் மேலும் ரீச் ஆக இப்படம் காரணமாக அமைந்தது.

உலக நாயகன் அழைப்பு :

ஹெச் வினோத் அசாத்திய திறனை வியந்த உலக நாயகன், இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்தார். இது இணையத்தில் பெரும் வைரல் ஆனது. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என உலக நாயகன் பம்பரமாக சுழன்று வருகிறார். இந்த நிலையில், உலக நாயகன் கமல், ஹெச் வினோத் இருவரும் சேர்ந்து எந்த மாதிரி படத்தை வழங்க உள்ளனர் என அனைவரும் வினவி வந்தனர்.

நெல் விவசாயிகள் சந்திப்பு:

கமல், ஹெச் வினோத் நேற்று நெல் விவசாய சங்கத்தோடு ஒரு சந்திப்பை நிகழ்த்தி உள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த அனைவரும் இது விவசாயம் குறித்து பேசப்போகும் படமாக வர போகிறதோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். பார்ப்போம் வினோத் KH 233 இல் என்ன மாதிரி சம்பவத்தை நிகழ்த்த போகிறார் என்று.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More