கோத்ரேஜ் நிறுவனம்-ரூ.515 கோடி முதலீடு (செங்கல்பட்டில் உற்பத்தி மையம) 446 பேருக்கு வேலை. பெகட்ரான்-ரூ.1000 கோடி (நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம்)-8 ஆயிரம் பேருக்கு வேலை.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன என்பது பற்றிய விவரம் வருமாறு:-
- ரிலையன்ஸ் ஜியோ-ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை)
- கோத்ரேஜ் நிறுவனம்-ரூ.515 கோடி முதலீடு (செங்கல்பட்டில் உற்பத்தி மையம) 446 பேருக்கு வேலை.
- டாடா எலெக்டரானிக்ஸ்-ரூ. 12 ஆயிரத்து 82 கோடி முதலீடு (கிருஷ்ணகிரியில் செல்போன் உற்பத்தி மையம்) 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- பெகட்ரான்-ரூ.1000 கோடி (நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம்)-8 ஆயிரம் பேருக்கு வேலை.
- வே.எஸ். டபிள்யூ-ரூ.12 ஆயிரம் கோடி (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் 6,600 பேருக்கு வேலை)
- டி.வி.எஸ். குழுமம்-ரூ.5 ஆயிரம் கோடி (தமிழகம் முழுவதும் திட்டங்கள் 500 பேருக்கு வேலைவாய்ப்பு)
- சீன நாட்டின் மிட்சுபிஹி நிறுவனம்-ரூ.200 கோடி (கும்மிடிப்பூண்டியில் மோட்டார் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது)
- வியட்நாம் நாட்டின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட்-ரூ.16 ஆயிரம் கோடி (தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைகிறது)
- ஹூண்டாய்-ரூ.6 ஆயிரம் கோடி (காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய மின்சார வாகன கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்படுகிறது)
- குவால்காம் நிறுவனம்-ரூ.177.27 கோடி முதலீடு செய்துள்ளது.