Mnadu News

உள்ளாடையில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம்: விமான நிலையத்தில் சிக்கியப் பெண் கைது.

கேரள மாநிலம் கரிப்பூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் தங்கம் கலந்த பேஸ்ட் அடங்கிய கலவை, அவரது உள்ளாடையில் வைத்து தைக்கப்பட்டுள்ளது என்றார். விமான நிலையத்தில் சுங்கவரித் துறை சோதனை முடித்து வெளியேறிய போது, தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் இளம் பெண்ணை டெர்மினல் பார்க்கிங் ஏரியாவில் தேடினர். முதலில் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், அவளை பரிசோதித்தபோது தங்கம் அடங்கிய பேஸ்ட் கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்கம் சுமார் 1.88 கிலோ எடை கொண்டதாக உள்ளது என்றார் சுங்கத் துறை அதிகாரி.இதையடுத்து அந்த இளம்பெண்னை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

Share this post with your friends