உத்தர பிரதேசத்தில் மெயின்புரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க இருந்தது. இதற்கான வி.ஐ.பி. பணியில் ஈடுபடுவது பற்றிய விவரங்களை கூறுவதற்காக காவல் அதிகாரி ஒருவர் சென்று கொண்டிருந்து உள்ளார்.அப்போது வழியில், இரண்டு டிராக்டர் ஓட்டுநர்கள் மோதலில் ஈடுபட்டனர். வேறு சிலரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால், மோதலில் ஈடுபட்ட நபர்கள் ஆஞ்சா கேட் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்கள் காவல் நிலையத்திற்குள்ளும் மோதி கொண்டனர். இதனை தொடர்ந்து, 4 பேர் மீது பிரிவு 191-ன் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. வேறு 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More