Mnadu News

உ.பி, டெல்லி, மும்பையில் கன மழை: 6 பேர் உயிரிழப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் 86 மில்லி மட்டர்P வரை மழை பதிவாகியுள்ளது. பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மும்பையில் கனமழை காரணமாக, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இதேபோல், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட், பீகார், உத்தரபிரதேசம், கேதர்நாத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.உ.பி மாநிலம் கேதர்நாத்தில் மழை காரணமாக, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், யாத்ரிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends