மதுரா – விருந்தாவன் சாலையில் உள்ள விருந்தாவன் கார்டன் என்ற தங்கும் விடுதி உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள சமையலறை பொருட்கள் வைக்கும் அறையில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் இரண்டு ஆம்புலன்ஸ், 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. இந்த விபத்தில் தங்கும் விடுதியில் வேலை செய்த ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயமைடைந்த ஒருவர் ஆக்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து மதுரா நகர தலைமை தீயணைப்பு அதிகாரி கூறுகையில், இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்த போது, அந்த ஹோட்டலின் முதல் தளத்தில் இருந்த பொருள்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அந்த தங்கும் விடுதியில் சுமார் 100 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்தார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More