Mnadu News

உ.பி.யில் தீ விபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு.

குஷிநகரில் உள்ள உர்தா கிராமத்தில் இரவு உணவுக்குப் பிறகு சங்கீதா மற்றும் அவரது 5 குழந்தைகள் வீட்டிற்குள் உறங்கச் சென்றுள்ளனர். அப்போது சங்கீதாவின் கணவர் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். இந்த சூழலில், திடீரென வீடு தீ பற்றி எரிந்தது. இதனைப் பர்த்த சங்கீதாவின் கணவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் சங்கீதா மற்றும் அவரது குழந்தைகளான 10 வயதான அன்கித, 9 வயதான லக்ஷ்மினா,3 வயதான ரீட்டா,இரண்டு வயதான கீதா மற்றும் ஒரு வயதான பாபுஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்பு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு,; தீ விபத்து நிகழ்ந்ததற்கான சரியான காரணத்தை அறிய போலீஸாருக்கு உத்தரடவிடப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More