Mnadu News

“ஊழலுக்கு விடை கொடுத்து சிக்கிமில் தாமரை மலரட்டும்” – ஜே.பி.நட்டா

சிக்கிம் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ‘அம்மா கேன்டீன்’ தொடங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

32 தொகுதிகள் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கு ஏப்.19 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அம்மாநிலத்திற்கான பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். அதில் சிக்கிமில் பெண்களால் நடத்தப்படும் ‘அம்மா கேன்டீன்’ என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும், இளைஞர்களுக்கு அதிகாரம், சுற்றுலா துறை ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜேபி நட்டா, இரும்பு உற்பத்தியில் நாம் 2வது இடத்தில் இருக்கிறோம். ஆட்டோமொபைல் உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தில் இருக்கிறோம். மொபைல் போன்கள், சீனாவிற்கு பதிலாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஊழலுக்கு விடை கொடுத்து சிக்கிமில் தாமரை மலரட்டும். இவ்வாறு அவர் பேசினார். மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் சிக்கிம் மாநிலம் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends