Mnadu News

ஊழல் வழக்கு விசாரணை: இம்ரான்கான் பலத்த பாதுகாப்புடன் உயர்நீதிமன்றத்தில் ‘ஆஜர்’.

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.இந்த கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, இம்ரான் கான் தரப்பு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அப்போது, இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதிகள், அவரை உடனடியாக விடுவிக்கும்படி உத்தரவிட்டனர்.அதே சமயம், இஸ்லாமாபாத் நீதிமன்றம் அறக்கட்டளை வழக்கை விசாரிக்க வேண்டும். அப்போது, நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதை நீங்கள் ஏற்க வேண்டும் என, இம்ரான் கானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பலத்த பாதுகாப்புடன் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பட்டார்.

Share this post with your friends