தென்மேற்கு எகிப்தில் நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் 45 பேருடன் தலைநகர் கெய்ரோ நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரக்கின் மீது மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர் தகவலறிந்து,சம்பவ இடத்துக்கு வந்த 17 ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எகிப்தில் மோசமான போக்குவரத்து சாலைகள் உள்ள நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More