அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நேசனல் எவர்கிளேட்ஸ் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. இதில், மீனவரான நபர் ஒருவர் தனது நண்பர் மைக்கேல் ரஸ்சோ என்பவருடன் ஆற்றில் படகு சவாரி செய்து உள்ளார். அப்போது, ஆற்று நீரில் அந்நபர் கையை கழுவ முயன்று உள்ளார். ஆனால், உடனிருந்த அவரது நண்பர் மைக்கேல் ரஸ்சோ, ஆற்றில் சுறா மீன்கள் இருக்கும். அதனால் தாக்கப்பட கூடிய ஆபத்து உள்ளது என கூறி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனை அந்த நபர் கேட்கவில்லை. இந்த எச்சரிக்கையை மீறி அவர், ஆற்று நீருக்குள் கையை நனைத்து உள்ளார். அப்போது, அந்த பகுதியில் திடீரென வந்த சுறா ஒன்று அவரது கையை கடித்து உள்ளது. இதனால், வலியால் அந்த நபர் அலறி துடித்து உள்ளார். அவரை சுறா மீன் ஆற்றுக்குள் இழுத்து உள்ளது. இதனை அருகே நின்றிருந்த நண்பர் வீடியோவாக படம் எடுத்து உள்ளார்.இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More