Mnadu News

எச்சரித்தவர் பணி நீக்கம்: வெடித்துச் சிதறியது டைட்டன்.

மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடுவதற்காக 5 பேருடன் ஆழ்கடலுக்குச் சென்று காணமால் போன டைட்டன் நீர்மூழ்கி, வெடித்துச் சிதறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்;, நீர்மூழ்கி கப்பலின் வடிவமைப்பும் பாதுகாப்பு அமைப்புகளும் முறையாக இல்லை என்றும், ஆழமான கடலுக்குள் செல்லும்போது, நீரின் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ளும் சக்திஅற்றதாக டைட்டன் விளங்குவதாக ஓஷன்கேட் நிறுவனத்துக்கு விரிவான ஆய்வறிக்கையை, அதன் ஊழியர் ஒருவர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு தாக்கல் செய்திருந்தார்.இதையடுத்து,அவரை பணியிலிருந்தே நீக்கியதோடு, நிறுவனத்தின் மிகவும் ரகசியமான தகவல்களை பிறருடன் பகிர்ந்துகொண்டதாக ஓஷன் கேட் நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தது தகவல்கள் தற்போத வெளியாகி உள்ளது.

Share this post with your friends