Mnadu News

எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு கனடா பணிபுரிய அனுமதி: அமைச்சர் சியான் பிரசர் தகவல்.

எச்1 பி விசா குறித்து பேசியுள்ள கனடா அமைச்சர் சியான் பிரசர்;, அமெரிக்கா எச் 1 பி விசா வைத்திருப்பவர்களில் 10 ஆயிரம் பேர் கனடாவிற்கு வந்து பணிபுரிய அனுமதிக்கும் வகையிலான திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில், தொழில்நுட்பத்துறையை சேர்ந்த பல்லாயிரகணக்கானோர் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் எச்1 பி விசா வைத்துள்ளனர். இந்த விசா வைத்துள்ளவர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், வேலை அனுமதிக்கும் திட்டத்தின் கீழ் கனடாவில் பணிபுரிய விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.அவர்கள் 3 ஆண்டுகள், கனடாவில் எந்த இடத்திலும் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் வாழ்க்கைத் துணை அல்லது அவர்களை சார்ந்துள்ளவர்கள் வேலை அல்லது கல்விக்காக தற்காலிகமாக குடியிருப்பதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். ஏன்று கூறியுள்ளார்.

Share this post with your friends