Mnadu News

எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க பருந்துகள்: இந்திய ராணுவம் தகவல்.

உத்தராகண்ட் மாநிலம் அவுலியில் இந்தியா – அமெரிக்கா இடையிலான 18-வது கூட்டு ராணுவப் பயிற்சி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதில் பருந்துகளை பயன்படுத்தி எதிரிகளின் ட்ரோன்களை வீழ்த்துவது எப்படி என்பது குறித்த செயல் விளக்கத்தை இந்திய ராணுவம் அளித்தது. இத்தகைய நோக்கத்துக்கு இந்தப் பறவையை பயன்படுத்துவது இதுவே முதல்முறை என்று ராணுவ அதிகாரிகள் கூறினர். இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையே போர் உத்திகள் மற்றும் நுட்பங்களை பரிமாறிக்கொள்ளும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.

Share this post with your friends