Mnadu News

எதிர்காலத்தில் அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும :ரஷியா எச்சரிக்கை.

கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்தது. ரஷியா ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த பகுதியில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததால் கோபமடைந்த ரஷியா அதனை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சர்வதேச ஒப்பந்தத்தை ரஷியா மீறி உள்ளதாக அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவிடம் அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்தது. அதே சமயம், சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. இந்த நிலையில்,இது குறித்து ரஷியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கெய் ஷாய்கு கூறுகையில், “ரஷிய எல்லைக்கு அருகில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததைப் போல், எதிர்காலத்தில் அமெரிக்காவின் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More