Mnadu News

எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல: பிரதமர் மோடி பேச்சு.

மத்திய பிரதேசத்தில், பா.ஜ.க,வின் பூத் கமிட்டியினருடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு நலனுக்காகவும், சந்ததிகள் முன்னேற்றத்திற்காவும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டுக்கு உகந்தது அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பயனடைவார்கள். ஊழல்கள் பிடிபட்டதால் எதிர்க்கட்சிகள் இன்றிணைந்து பாஜகவை எதிர்க்கின்றன. ஊழல் செய்தவர்களை விட மாட்டோம், அவர்கள் சிறை செல்ல நேரிடும். அரசியல் சானமும் அனைவரும் சமம் என்று கூறும்போது எப்படி 2 வகையான சட்டங்கள் இருக்க முடியும்? பொது சிவில் சட்டத்தில் எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்கிறது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு கடும் அநீதி இழைக்கிறார்கள்.வரும் 2024 தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. அதனால் அவர்கள் கூட்டங்கள் நடத்தி ஒன்று கூடுகிறார்கள். அடுத்த மக்களவை தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று கூறி உள்ளார்.

Share this post with your friends