உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கம் ஒன்றில், ஆளும் பா.ஜ.க.வை, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும் எதிர்க்கட்சிகளை அந்நாட்டில் கலகத்தில் ஈடுபட்டு உள்ள வாக்னர் குழுவுடன் ஒப்பிட்டு கட்டுரை ஒன்று வெளிவந்தது. அதில்,வாக்னர் அமைப்பை ஜனநாயக காவலர் என சாம்னா அமைப்பு அழைத்து உள்ளதுடன், அதனை இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளுடன் ஒப்பிட்டு உள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று, வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, மோடி மற்றும் அமித்ஷா இருவரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மிக பெரிய அளவில் கூலிப்படைகளை உருவாக்கி உள்ளனர் என தெரிவித்து உள்ளது. புதினை போன்று மோடி மற்றும் அமித்ஷா இருவரும் சர்வாதிகாரம் கொண்டு வரப்பட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த தலையங்கம் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More