2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல் அமைச்சர்; நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.இதனையொட்டி பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அவர், இதில் கட்சித் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் என்றும் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தார்.இந்த நிலையில் ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தவிர, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பங்கேற்பார் என மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் உறுதியளித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More