Mnadu News

எதையும் எதிர்கொள்ள தயாராக விமானப்படை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகலில் உள்ள இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விமானப்படையின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “1948, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் பகை நாடுகளுடன் ஏற்பட்ட போர்களில் நாட்டை காக்க இந்திய விமானப்படையின் துணிச்சல் மிக்க வீரர்கள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். அது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. எதிர்கால போர்க்களத்தில் உயர் தொழில்நுட்பப் போரை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள் உட்பட ஒட்டுமொத்த பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நமது விமானப்படை எப்போதும் தயாராக இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷெல் வி.ஆர். சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share this post with your friends