எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன். திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: * எனது ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்து திறந்து வைத்திருக்கிறேன். * சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது. * திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்கின்றன? – வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தினோம். * முதலீட்டாளர் மாநாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் தரவில்லை. * மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – செலவினம் குறித்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. * நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை. * திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.