மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “கொலை மிரட்டல் குற்றம் சாட்டப்படுள்ள சாகர் பார்வே தனியார் நிறுவனம் ஒன்றில் டேட்டா ஃபீடிங் மற்றும் அனாலிட்டிக் பிரிவில் வேலை செய்துவருகிறார். இந்தக் கொலை மிரட்டல் வழக்கினை விசாரித்து வந்த மும்பை போலீஸார் பார்வேவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 14-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முகநூலில் சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்த சாகர் பார்வே, அதற்காக இரண்டு போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளார். முதல் கட்ட விசாரணையில் அவருக்கு எந்த அமைப்புடனும் தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More