Mnadu News

என்னை விசாரிக்க அமலாக்கத்துறை அவசரம்:தெலுங்காளர் கவிதா விரக்தி.

புதுடில்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, தெலுங்கானா முதல்வரின் மகள் கவிதாவுக்கு, அமலாக்கத் துறை, ‘சம்மன்’ அனுப்பியிருந்தது. ஆஜராக அவர் கால அவகாசம் கோரினார். இதை அமலாக்கத்துறை ஏற்று கொண்டது. இந்நிலையில் தெலுங்கானா முதல் அமைச்சரின்; மகள் கவிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு பெண்ணை விசாரிக்க வேண்டுமானால், அவளுடைய வீட்டில் உரிய அனுமதியுடன் விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு, இன்று(மார்ச் 09) நேரில் ஆஜராகும்படி, அமலாக்கத் துறை, ‘சம்மன்’ அனுப்பியிருந்தது. இதையடுத்து மார்ச் 11ம் தேதி என் வீட்டிற்கு விசாரணைக்கு வரலாம் என்று அமலாக்கத்துறையிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறினார்கள்.

Share this post with your friends