தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது.
முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர். அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.
இந்த நிலையில், முதல் சுற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 104 எம்பிபிஎஸ் இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 2 எம்பிபிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன.
இதைத் தவிர, பிடிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 788 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 833 இடங்கள் காலியாக உள்ளன. இதே போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில் 28 இடங்களும் நிரம்பவில்லை. அதன்படி மொத்தமாக ஆயிரத்து 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. நாளை மாலை 5 மணி வரை இணையவழியே விருப்பமான இடங்களைத் தேர்வு செய்யலாம் என்றும், அதன் முடிவுகள் வரும் 24-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு வலைதளங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...
Read More