Mnadu News

எலான் மஸ்குக்கு ஆலோசனை வழங்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த வாரம் வாங்கினார். முதல் நாளிலேயே, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்தியரான பராக் அக்ரவால் உள்ளிட்ட ஐவரை அவாட பணியில் இருந்து நீக்கினார். அதையடுத்து, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குப் புதிய அதிகாரிகளை அவர் நியமித்து வருகிறார்.
இந்நிலையில், ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்குக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாகத் இந்திய அமெரிக்கரும் சென்னையைச் சேர்ந்தவருமான ஸ்ரீPராம் கிருஷ்ணன், தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் தலைமையில் ட்விட்டர் நிறுவனம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் என்ற ஏ16 இஸட் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் ஸ்ரீPராம் கிருஷ்ணன், தற்காலிகமாகவே எலான் மஸ்குக்கு ஆலோசனை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஏ16 இஸட் நிறுவனத்தின் முழுநேரப் பணியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends