Mnadu News

எல்லா இன்னல்களையும் காங்கிரஸ் கட்சிக்காக அனுபவித்தேன்.

எல்லா இன்னல்களையும் காங்கிரஸ் கட்சிக்காக அனுபவித்தேன் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.கர்நாடக தும்கூரில் நொனவினகெரேவில் உள்ள காடசித்தேஸ்வரா மடத்திற்கு சென்ற காங்கிரஸ் மாநிலத்தலைவர் டி.கே.சிவக்குமார், அங்கு சிறப்பு பூஜை சுவாமி தரிசனம் செய்தபிறகு, ரிஷபகேந்திரசுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ள டி.கே.சிவக்குமார்,பணபதுக்கல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தபோது சோனியாகாந்தி என்னை சந்தித்து ஆதரவு அளித்தார். எனக்காக நான் எந்த தவறையும் செய்யவில்லை. எல்லாவற்றையும் கட்சிக்காகவே செய்தேன். எல்லா இன்னல்களையும் காங்கிரஸ் கட்சிக்காக அனுபவித்தேன்.தேர்தல் களத்தில் நேரடியாக நின்று, வெற்றிக்காக உழைத்திருக்கிறேன். முதல் அமைச்சர் போட்டியில் நானும் இருக்கிறேன் என்று கூறியள்ளார்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More